Take a fresh look at your lifestyle.

அதிரடித் தீர்ப்பு வழங்கி குற்றம் சாட்டபட்டவர்களையும் பாராட்டி தீர்ப்பளித்த நீதிமன்றம்!

 

உலகத் தமிழர்களின் குறிப்பாக புலம் பெயர் ஈழத்தமிழர்களின் வாழ்வில் இன்று வெற்றி நாள் ‘வெறின் சோனா ‘குற்றவியல் நீமன்றம் வழங்கிய தீர்ப்பானது. இதுவரை காலமும் செயற்பட்டுக்கொண்டிருக்கும் மக்களின் மனங்களில் மகிழ்சியை கொண்டுவந்துள்ளது

Das Bundesstrafgericht hält das World Tamil Coordinating Comitee (WTCC) nicht für eine kriminelle Organisation. (Themenbild)

விடுதலைப்புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பு என்றும் அவ் அமைப்புக்கு நிதி வழங்குதல் குற்றவியல் நீதிமன்றங்களில் விசாரிக்கப்படவேண்டிய ஒரு குற்றமாகவும் கருதப்பட்டு வந்ததானது. வெறின் சோனா நீதி மன்றத்தின் தீர்ப்பின் மூலம் தகர்ந்து போயுள்ளது.

விடுதலைப்புலிகள் மீது அதாவது குற்றம் சாட்டப்பட்டடவர்கள் மீது நிதி சேகரித்தல் , மிரட்டிப் பணம் பறித்தல் என சுமத்தப்பட்ட குற்றமும் தவறென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அவர்களில், குலம், அப்துல்லா, மாம்பழம் மூவரும் வங்கிக்கடன் பெறுவதில் நடைபெற்ற மோசடிக்கு ஒத்தி வைக்கப்பட்ட தடுப்புத் தண்டனையும், அபராதம் செலுத்தவும் பணிக்கப்பட்டார்கள்.

யோகேஸ், குமார், கவிதாஸ், சிவலோகநாதன் ஆகிய மூவரையும் சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றத்தில் இருந்து விடுவித்து இழப்பீடும் வழங்கியது.

இதே வேளை நெருக்கடியான காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களிற்காக அவர்கள் ஆற்றியபணிக்காக நீதி மன்றம் தன் பாராட்டுதல்களையும் தெரிவித்துள்ளது.