Take a fresh look at your lifestyle.

சிறு செய்திகள் பார்வைக்கு….

ஶ்ரீலங்கா,போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக சிறைச்சாலையில் மரணதண்டனை அனுபவித்துவரும் நிலையிலும், போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபடும் கைதிகளுக்கு எதிர்காலத்தில் தூக்குத்தண்டனை விதிப்பதற்கான நடைமுறையில் கைச்சாத்திடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.

02. ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் 13.5 பில்லியன் ரூபா கடனை செலுத்துவதற்காக அரச வங்கிகள் இரண்டிடமிருந்து கடன் பெற்றுக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

03. யாழ். சுழிபுரத்தில் சிறுமி ரெஜினா கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில், கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கு மல்லாகம் நீதிமன்ற நீதவான் காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

04. இலங்கை மீனவர்கள் 6 பேருடன் பயணித்த படகொன்று காஸா மாலைதீவு சர்வதேச கடற்பரப்பில் தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கும் கடற்றொழில் திணைக்களம், அமெரிக்க விமானம் ஒன்றே இந்தப் படகைக் கண்டுபிடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

05. எரிபொருளின் விலை நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டுமொரு முறை பொதுப் போக்குவரத்து சேவைக் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளுக்கான சூழல் உருவாகியுள்ளது