Take a fresh look at your lifestyle.

நினைவு ஊர்தியையும் அஞ்சலி செலுத்துபவர்களையும் அச்சுறுத்தல் புகைப்படம் எடுத்தவர்கள் யார்?

வடதமிழீழம், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் வகையில் ‘தீபமேந்திய ஊர்தி பவனி’ நேற்று மதியம் 12 மணியளவில் வவுனியாவை வந்தடைந்தது.

தீபமேந்திய ஊர்தியினை உந்துருளியில் பின்தொடர்ந்து வந்த இனந்தெரியாத நபர்கள் ஊர்தியில் அஞ்சலி செலுத்தியவர்களையும் அவ்விடத்திற்கு வந்தோரையும் தமது கையடக்கத்தொலைபேசிகளில் புகைப்படம் எடுத்தனர்.

 

யுத்தம் நிறைவடைந்து பல வருடங்கள் கடந்து நல்லாட்சி நிலவுகின்ற போதிலும் நல்லாட்சி அரசிலும் இவ்வாறு இனந்தெரியாதவர்களின் அச்சுறுத்தல் தொடர்ந்த வண்ணமுள்ளமை குறிப்பிடத்தக்கது.