Take a fresh look at your lifestyle.

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்!

வேலையற்ற பட்டதாரிகளுக்கு பாகுபாடின்றி உடனடியாக நியமனம் வழங்குமாறு கோரி மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் இன்று(16.5.2018) புதன்கிழமை கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

கிழக்கு மாகாண ஆசிரியர் போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்த பட்டதாரிகளுக்கு உடனடியாக நியமனம் வழங்குமாறும் ,தன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள் வலியுறுத்தினர்.

மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப் பூங்காவுக்கு முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

பட்டதாரிகளுக்கான தொழில் நியமனத்தில் 35 வயதுக்கு மேற்பட்ட பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், தொழில் என்பது எமது உரிமையாகும், இலங்கையிலுள்ள 57000 பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்க வேண்டும், நல்லாட்சி அரசாங்கம், பட்டதாரிகளை ஏமாற்றக் கூடாது என்பன போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களையும் கறுப்பு கொடிகளையும் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்கு மாகாணத்திலுள்ள வெற்றிடங்களை பட்டதாரிகளைக் கொண்டு நிரப்புமாறும் கிழக்கு மாகாண ஆசிரியர் போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து நேர்முகப்பரீட்சைக்கு தோற்றிய பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட வில்லை உடனடியாக நியமனம் வழங்குமாறும் இதன் போது கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட அரசாங்க காரியலயம்வரை ஆர்பாட்ட ஊர்வலமாக சென்று அரசாங்க அதிபர் மா. உதயகுமாரிடம் மகஜர் ஒன்றை கையளித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.