Take a fresh look at your lifestyle.

மது அருந்திய மாதுக்கள் இருவர் மோட்டார் சைக்கிள் செலுத்தி வந்தபோது கைது: யாழில் அதிர்ச்சி சம்பவம்!

 

யாழ்பாணம் கோப்பாய் பகுதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய இரு பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் இன்று இரவு 8:20 மணியளவில் நடந்துள்ளது.

கோப்பாய் வீதியில் போக்குவரத்து காவல்துறையினர் சோதனைகளில் ஈடுபட்ட போது, மோட்டார்சைக்கிளில் வந்த சந்தேகத்திற்கிடமான இரண்டு பெண்களை காவல்துறையினர் சோதனையிட்டனர். அந்த பெண்கள் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஒட்டிவந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்துஇ குறித்த பெண்களை கைது செய்த கோப்பாய் காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.