Take a fresh look at your lifestyle.

யாழில் ஊடகவியலாளர்கள் போராட்டம்!

வடக்கு கிழக்கில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் மேற்கொள்ளப்படுவதை கண்டித்தும், தமிழ் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்த கோரியும் யாழ்ப்பணத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து இன்றைய தினம் காலை 10 மணியளவில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

காலைக்கதிர் பத்திரிகையின் பத்திரிகை விநியோக முகாமையாளர் செல்வராசா இராசேந்திரம் (வயது 56) கடந்த 28 ஆம் திகதி அதிகாலை தாக்கப்பட்டிருந்தார். இந்த நிலையிலேய மேற்படி போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டிருந்தது.

முன்னைய ஆட்சிகளிலும் தற்போதைய ஆட்சியிலும் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் குற்றவாளிகள் தொடர்ந்தும்

கைது செய்யப்படாமல் சுதந்திரமாகவே நடமாடுகின்றனர். எனவே ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறு குறித்த போராட்டத்தின் போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.