Take a fresh look at your lifestyle.

யாழ் பல்கலைக்கழகத்தில் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் காலந்துரையாடல்!

அரசியல் கைதிகளின் விடுதலை,முழுமையான சட்டக் கொள்கை நிலைப்பாட்டை நோக்கி எனும் தலைப்பிலான காலந்துரையாடல் ஒன்று யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட அறையில் இன்றைய தினம் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடல் அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையின் சமகால சட்ட விடயங்களுக்காக அரங்கத்தோடு இணைந்து நடாத்தப்பட்டதாகும்.

இந்த கலந்துரையாடலில் பிரதான உரையினை யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர் குமாரவடிவேல் குருபரன் ஆற்றியிருந்தார். பிரதான பதிலுரையினை அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் அழைப்பாளர் அருட்பணி ம. சக்திவேல் ஆற்றியிருந்தார்.

இந்த நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.