Take a fresh look at your lifestyle.

வலிசுமந்த மக்களிடம் கபடநாடகம் ஆடும் சிறிலங்கா இராணுவம்!

2009 ஆம் ஆண்டு இதே நாளில் தமிழ் மக்களை கொன்று குவித்த இனப்படுகொலை சிறிலங்கா அரசு இன்று அதே மக்களுக்கு இன்று முள்ளிவாய்க்கால் மண்ணில் உதவி என்னும் பெயரில் குளிர்பானம் வழங்கி தங்களை ஒரு தியாகிகளாக உலக நாடுகளிற்கு காட்டமுனைகிறது சிறிலங்கா அரசு.

இந்த இனஅழிப்பு படுகொலை நிகழ்ந்து 9 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இன்னமும் சொல்லவொண்ணாத் துயரத்துடனும், தீராத வலிகளுடனும் தமிழ்மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின-;றார்கள். உறவுகளின் உயிர்இழப்புகளுடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் துயரம், உறுப்புகளை இழந்தவர்களின் கதி, போர்க்களத்தில் நின்று, இன்று வாழ்வோடு போராடும் முன்னாள் போராளிகளின் நிலை என்பன மிகத்துயரமாக எம்மை வருத்திக்கொண்டிருக்கின்றன.

கண்துடைப்பு நடவடிக்கையாக அற்பசொற்ப உதவிகளை வழங்கி, சிறிலங்கா அரசு தமிழ்மக்கள் மேல் அக்கறைகொண்டுள்ளதாக உலகிற்கு காட்டிக்கொண்டு, நல்லிணக்கம் என்ற போர்வையில் தமிழர்களின் பூர்வீகநிலத்தை மேன்மேலும் வன்பறிப்பு செய்துகொண்டிருக்கின்றது.

இந்நேரத்தில் உலகஅரங்கில் தனக்கு ஏற்பட்டிருக்கும் போர்க்குற்றக் கறையை இல்லாமற் செய்வதற்காக, முள்ளிவாய்க்காலில் நடத்திய இனஅழிப்பை தமிழ்மக்களின் நினைவில் இருந்து அகற்றிவிடவேண்டும் என்பதையே இலக்காக கொண்டு தற்போதைய அரசு செயற்பட்டு வருகிறது.

ஒருபுறத்தே தமிழ்மக்கள் இயல்பாக வாழ்வதாக உலகிற்கு காட்ட முற்படும் அரசு, மறுபுறத்தே தொடர்ந்து தமிழினஅழிப்பை மறைமுகமாக முன்னெடுத்துச் செல்கிறது.