Take a fresh look at your lifestyle.

முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த தமிழ் இன அழிப்புநாள் நிகழ்வுகள்! – நோர்வே

மே 18 தமிழ் இன அழிப்பு நாள்

முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த தமிழ் இன அழிப்புநாள் நிகழ்வுகள்,

ஒஸ்லோ தொடருந்து நிலையத்திற்கு முன்னால் மே 18 வெள்ளிக்கிழமை பிற்பகல் 17:00 மணியளவில் நாம் அனைவரும் ஒன்று கூடுவதுடன் ஆரம்பித்து,

பின்னர் ஊர்வலமாக நோர்வே பாராளுமன்ற முன்றலை வந்தடைந்து அங்கு கவனஈர்ப்பு நிகழ்வுகளாக நடைபெறும்.

ஒஸ்லோ வாழ் தமிழர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இந்த நாளை நினைவுகூர்வதுடன்,

சிறீலங்கா அரசின் ஓர் உச்சக்கட்ட நடவடிக்கையாக எம் இனத்தின் மீது நடாத்தி முடிக்கப்பட்ட தமிழ் இன அழிப்பை சர்வதேசத்திற்கு தொடர்ந்தும் எடுத்துரைக்கும் நாளாகவும் இந்நாளை அமைத்துக்கொள்வோம்.

அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவும்!

– தமிழர் ஒருங்கிணைப்புக் குழு