Take a fresh look at your lifestyle.

மட்டக்களப்பு சவுக்கடி பகுதியில் தீ பரவியுள்ளது!

மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரை பகுதியில் உள்ள சவுக்குமர காட்டிற்கு இனந்தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளனர்.

தொடர்சியாக எரியும் தீயை அனைப்பதற்கு மட்டக்களப்பு மாநகர தீயனைப்பு பிரிவு மற்றும் ஏறாவூர், செங்கலடி பிரதேச சபையினர் மற்றும் காவல்துறையினர்  முயற்சி செய்து வருகின்றனர்.

குறித்த தீயினால் கடற்கரை ஓரத்தில் இருந்த பல சவுக்கு மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த தீயானது காணி அபகரிக்கும் நபர்களினால் திட்டமிட்டு வைக்கப்பட்டிருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இது குறித்த விசாரணைகளை ஏறாவூர் பகுதி காவல்துறை முன்னெடுத்து வருகின்றனர்.