Take a fresh look at your lifestyle.

யாழ்.பொது நூலகம் முன்பு நினைவேந்தல் நிகழ்வு!

யாழ்.பொது நூலகம் சிறிலங்கா அரசின் அனுசரணையுடன் அதன் படைகளால் எரிக்கப்பட்டு இன்றுடன் 37 வருடங்களாகின்ற நிலையில் அந்த நினைவு நிகழ்வுகள் இன்றைய தினம் யாழ்.பொது நூலகத்திலும், பொது நூலகத்தின் பின்புறத்திலும் நடைபெற்றுள்ளன.

யாழ்.பொது நூலகத்தில் நூலக அதிகரிகளாலும், வெளியே வடக்கு மாகாண சபை உறுப்பினர்களாலும் இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதன் போது நூலகம் எரிக்கப்பட்ட செய்தியை கேட்ட பாதர் டேவிட் அடிகளாரும் நினைவு கூறப்பட்டார்.