Take a fresh look at your lifestyle.

புலனாய்வுத்துறை மோப்பம் விடுவது எதற்காக?

உயிரிழந்த தமது உறவுகள் நினைவாக தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அவதானிக்கலாம் என சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சு அனுமதியளித்துள்ள நிலையில், வடக்கில் இடம்பெற்று வரும் நினைவஞ்சலி நிகழ்வுகளை இராணுவ புலனாய்வாளர்கள் புகைப்படம் பிடிப்பது அனைவர் மனதிலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.IMG_9784

போரில் உயிரிழந்த மக்கள் நினைவாக நினைவேந்தல் நிகழ்வை நடாத்துவதற்கு எந்த தடையுமில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன கடந்த பன்னிரண்டாம் திகதி தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அறிவித்திருந்தார்.

எனினும், தற்போது வடக்கில் முள்ளிவாய்க்கால் படுகொலை வாரத்தினை முன்னிட்டு கடந்த 12 ஆம் திகதி முதல், நினைவு தின நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. ஆரம்ப நாளான 12 ஆம் திகதி செம்மணி படுகொலை நடைபெற்ற இடத்தில் சுடர் ஏற்றி அஞ்சலிகள் நடைபெற்றன.  இதன் போதும், இராணுவபுலானாய்வு பிரிவு நினைவு நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அனைவரினையும் புகைப்படம் எடுத்ததோடு, அவர்களது நினைவஞ்சலி உரைகளையும் ஒளிப்பதிவு செய்தனர்.

IMG_9782இதே போல் 13 ஆம் திகதி நாகர்கோவிலில் இலங்கை விமானப்படையால் நூற்றுக்கணக்கான பொது மக்கள் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்விலும் 14 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் செல்வீச்சில் கொல்லப்பட்ட நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்விலும், 15 ஆம் திகதி இலங்கை கடற்படையால் 38 பொதுமக்கள் வெட்டி கொலைசெய்யப்பட்ட நெடுந்தீவு குமுதினி படுகொலை நினைவு தூபியில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்விலும், 16 ஆம் திகதி வடக்கு கிழக்கின் தலைநகரான திருகோணமலையில் அமைந்துள்ள வெலிக்கடை தியாகிகள் அரங்கில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்விலும் இராணுவ புலனாய்வு பிரிவின் கண்காணிப்பு நடவடிக்கைகள் வெளிப்படையாகவே தெரிந்தன. ஒவ்வொரு நிகழ்விலும் நான்கு புலனாய்வாளர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

புலனாய்வு பிரிவின் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்பில், 14 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் செல்வீச்சில் கொல்லப்பட்ட நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்ற நினைவஞ்சலி கூட்டத்தில் வடக்கு மாகாண உறுப்பினர் சிவாஜிலிங்கம் வெளிப்படையாகவே கூறியிருந்தார். இந்த நிலையில் நினைவஞ்சலிகளுக்கு தடையில்லை என கூறும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு, அந்த நிகழ்வுகளை இராணுவ புலனாய்வு பிரிவின் கண்காணிப்புக்கு உட்படுத்தியுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.