Take a fresh look at your lifestyle.

கொஸ்கம ஆயுத களஞ்சிய தீவிபத்தில் ஒருவர் பலி 47 பேர் காயம்!

image2இலங்கையின் அபிஸாவளைப்பகுதியில் சாலாவ இரானுவ ஆயுத களஞ்சியத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒரு படையினர் உள்ளிட்ட 47 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிபத்தினால் உயிரிழந்த படைவீரருக்கு ஜனாதிபதி மைதிரிபால சிறீசேன இரங்கல் தெரிவித்துள்ளார்.

குறித்த ஆயுத களஞ்சியத்தின் தீ தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இருந்தும் அவ்வப்போது வெடிப்பு சம்பங்கள் இடம்பெற்று வருவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளார்கள்.

நேற்று மாலை இடம்பெற்ற இந்த தீவிபத்தில் ஆயுத களஞ்சியத்தில் உள்ள ஆயுதங்களின் பாகங்கள் சிதறி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிபத்தின் போது படைமுகாமினை அண்மித்த வீடுகள் கட்டிடங்கள் பல சேதடைந்துள்ளன.

குறித்த தீவிபத்தினை தொடர்ந்து படைமுகாம்அமைந்துள்ள பகுதியினை சுற்றி ஆறு கிலோமீற்றர் தூரம் வரையில் குடியிருந்த மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் படையினர் ஈபட்டுள்ள நிலையில் தற்போது ஒரு கிலோமீற்றர் வரை பாதுகாப்பு வலயமாக குறைக்கப்பட்டுள்ளது.

image4இந்த தீவிபத்து நடத்த இடத்தினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளார் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வு திணைக்கழத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.image3

கொஸ்கம பிரதேசத்தில் மக்கள் வாழ் இடங்களில் 1994 ஆம் ஆண்டு படையினரால் முகாம் அமைக்கப்பட்டுள்ளது இதற்கு பிரதேச வாசிகள்  எதிர்பினை தெரிவித்துள்ளார்கள்.

இருந்தும் அப்பேது இருந்த அரசாங்கம் இலங்கை படையினரின் பொறியியல் பிரிவின் முகாமினை அமைத்துள்ளார்கள்.

இலங்கை படையினரின் பாரிய ஆயுத களஞ்சியங்களில் ஒன்றாக இது மாற்றப்பட்டுள்ளது,இந்த ஆயுத களஞ்சியத்தில் துப்பாக்கி ரவைகள்,மோட்டார் எறிகணைகள்,உள்ளிட்ட பெருமளவான வெடிபொருட்களை சேமிக்கும் களஞ்சியமாக காணப்பட்டுள்ளது.

இன்னிலையில் அண்மையில் பனாகொட படைமுகாமில் இருந்து பல ஆயுத வெடிபொருட்களும் சாலாவ படைமுகாமிற்கு மாற்றப்பட்ட நிலையில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.