Take a fresh look at your lifestyle.

கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் பிரதமர்

கொஸ்கம  சாலாவ இராணுவ முகாமின் ஆயுத களஞ்சியசாலையில் பரவிய தீயினால் ஏற்பட்ட பாரிய வெடிப்புச் சம்பவங்களை அடுத்து, பொதுமக்களின் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்களை அரசு பொறுப்பேற்றுள்ளது.

அதற்கமைய குறித்த சம்பவத்தில் முழுமையாக சேதமடைந்த வீடுகளை மீண்டும் நிர்மாணித்துத் தருவதாகவும், சிறிய சேதங்கள் ஏற்பட்டுள்ள வீடுகளை புனர் நிர்மாணம் செய்வதற்கு தேவையான இழப்பீட்டை வழங்குவதாகவும் பிரதமர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதி வழங்கியுள்ளார்.

அத்துடன் மூடப்பட்டுள்ள கிராம சேவகர் பிரிவு இல 9 ஐ தவிர அனைத்து பாடசாலைகளும் நாளை திறக்கப்படும் எனவும்> மின்சாரம் நாளைய தினம் வழங்கப்படும் எனவும் சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

அதேவேளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான சமைத்த உணவு மற்றும் குடிநீர் என்பவற்றை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் உறுதியளித்தார்.

சாலாவ இராணுவ முகாமின் நிலைமையை நேரில் கண்டறியும் நோக்கில், கொஸ்கம பிரதேசத்திற்கு விஜயம் செய்தபோது, பதிக்கப்பட்ட மக்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.