Take a fresh look at your lifestyle.

தமிழ் மக்கள் பேரவையின் உபகுழுவிற்கு அமெரிக்கர் ஆலோசகராக நியமிப்பு

தமிழ் மக்கள் பேரவையின் பொறுப்புக்கூறலுக்கான உபகுழுவிற்கு அமெரிக்கர் ஒருவர்ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களின் இணைத்தலைமையில் செயற்படும் தமிழ்மக்கள் பேரவையின் பொறுப்புக்கூறலுக்கான உபகுழுவிற்கு Illinois பல்கலைக்கழகத்தின் சர்வதேச சட்டங்கள் குறித்த விரிவுரையாளரான Francis Boyle ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணை நிமித்தம் இந்த உபகுழு அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது போர்க்குற்றங்களுக்கான பன்னாட்டு விசாரணைகள் நீக்கப்பட்டு உள்ளக பொறிமுறைக்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

வடமாகாண முதல்வரின் செயற்பாடுகள் மற்றும் தமிழ்மக்கள் பேரவையின் செயற்பாடுகளை தென்னிலங்கை கட்சிகள் மற்றும் அரசியல் வாதிகள் எதிர்ப்பு வெளிப்படுத்தி வரும் நிலையில் வெளிநாட்டவர் ஒருவரை தமிழ்மக்கள் பேரவை ஆலேசகராக நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.