Take a fresh look at your lifestyle.

நிதி மோசடி விவகாரத்தில் கைதான பசில் ராஜபக்க்ஷ பிணையில் விடுதலை

நிதி மோசடி விவகாரம் தொடர்பில்  குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப் பட்ட இலங்கையின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷவை பிணையின் கீழ் விடுதலை செய்ய பூகோடா நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி பசில் ராஜபக்க்ஷவின் வெளிநாட்டு பயணங்களை தடை செய்வதாக நீதிபதி அறிவித்தார்.

கறுப்புப் பணத்தை  பயன்படுத்தி காணியொன்றை வாங்கியதாக பசில் ராஜபக்க்ஷ மீது குற்றச்சாட்டு சுமத்தப் பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த மாதம் நிதி மோசடி புகாரில் கைதான பசில் ராஜபக்க்ஷ பிணையில் வெளியே வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

20 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகள் இரண்டு மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் விடுவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.