Take a fresh look at your lifestyle.

மனித புதைகுழி மனித எச்சங்கள் ஃபுளோரிடா செல்கின்றன

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் உள்ள மனித புதை குழி தொடர்பான வழக்கில் குற்றப்புலனாய்வுத் திணைக்கழத்தினர் நீதிமன்றில் முன்வைத்த பரிந்துரையை பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் நிராகரித்துள்ளார்கள்.

திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு இன்று மன்னார் நீதவான் எச்.ஏ.அலிக்ராஜா முன்னிலையில்  இடம்பெற்றுள்ளது.

இதன்போது மனித புதைகுழியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களை பகுப்பாய்விற்காக அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள நிறுவனம் ஒன்றிற்கு கொண்டுசெல்ல வேண்டும் என்று குற்றப்புலனாய்வுத் திணைக்கழத்தினர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

மாத்தளை மனித புதைகுழி தொடர்பிலான எச்சங்களும் ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள நிறுவனத்திற்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை மிருகங்களின் எச்சங்கள் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளதாகவும் காணாமல் போனோர் தொடர்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளார்கள்.

இதனால் அங்குள்ள நிறுவனம் தொடர்பில் தமக்கு நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்கள்.

தாம் பரிந்துரைத்த மூன்று இடங்களை நிராகரித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் அமெரிக்காவின் ஃபுளோரிடாவிற்கு அனுப்பத்தீர்மானித்தமை குறித்து தமது எதிர்பினை வெளிப்படுத்துவதாக காணாமல் போனோர் தொடர்பில் வாதிட்ட வழக்குரைஞர்களில் ஒருவரான வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.