Take a fresh look at your lifestyle.

சுதந்திரக் கட்சியில் முறுகல்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்க்ஷவை சுதந்திரக் கட்சியின் இரண்டாம் தலைமைத்துவ பதவி வழங்கப்படுமாயின் தாம் நல்லாட்சி அரசாங்கத்துடனான சகல நடவடிக்கைகளில் இருந்தும் விலகுவதாக  முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இதனால் தாம் கட்சியிலிருந்து வெளியேறும் நிலை உருவாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தெற்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்க்ஷவை சுதந்திரக் கட்சியின் உப தலைவர் பதவி வழங்கப்படவேண்டும் என்று அமைச்சர் ஜேன்செனவிரத்ன கோரிவருகின்றார். இதற்கு மேலும் சில முதன்மை உறுப்பினர்களும் ஆதரவு தெரிவிக்கின்றார்கள்.

இன்னிலையில் சந்திரிக்கா இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.

மேசடிக்காரர்களை துடைதெயியவே புதிய அரசாங்கம் தங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. மீண்டும் அவ்வாறானவர்களுக்கு பதவி வழங்கப்படுமாக இருந்தால் இந்த அரசாங்கத்தில் தொடர்ந்து இருப்பதில் அர்த்தமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை தமக்கு தேவையாயின் இரண்டாவது அல்ல முதலாவது தலைவராகவும் முடியும் என கோத்தபாய ராஜபக்க்ஷ நேற்று கொழும்பில் வைத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.