Take a fresh look at your lifestyle.

வெடிவிபத்திற்கு விசாரணை

கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில் அறிக்கை கிடைத்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றில் இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்காக இராணுவ நீதிமன்ற சபை ஒன்றை நிறுவவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஆயுதகளஞ்சியம் வெடிப்பு தொடர்பில் விசாரணைகளை நடத்துடமாறு இரகசிய காவல்துறையினருக்கு நேற்று ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொஸ்கம- சாலாவ இராணுவ முகாமில்ஏற்பட்ட வெடிவிபத்தில், 1,000 கோடி பெறுமதியான வெடிபொருட்கள் அழிந்து போனதாக, கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த வெடிவிபத்தினால், 9 ஆயிரம் தொன் வெடிபொருட்கள் முற்றாக நாசமாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் பெறுமதி 10 பில்லியன் 1000 கோடி இலங்கை ரூபாவாகும்.

இந்த வெடிபொருள் கிடங்கு சரியான நிபுணத்துவத்துடன் அமைக்கப்படவில்லை என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொஸ்கம உப ஆயுதக் கிடங்கு, 1994ஆம் ஆண்டுகளின்  தொடக்கத்தில்- சந்திரிகா குமாரதுங்க ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

போரின் போது, இங்கு 20 ஆயிரம் தொன் வெடிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.

அதில் பாதி, பின்னர் வியாங்கொட உப ஆயுதக் கிடங்குக்கு மாற்றப்பட்டது என்றும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.