Take a fresh look at your lifestyle.

இலங்கை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

இலங்கை நாடாளுமன்றம் தொழில் நுட்ப பிரச்சனை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது

இன்று கூடிய நாடாளமன்ற அமர்வு தொழில் நுட்ப பிரச்சனை காரணமாக நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று நாடாள மன்றில் விவாதத்திற்கு எடுத்துகொள்ளப்படவிருந்த நிதிஅமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற நாடாளமன்ற அமர்வுகளில் பிரதமரிடம் கேள்விகளை தொடுக்கும் நேரத்தில் முக்கிய கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

வன்னி மாவட்ட நாடாளமன்ற உறுப்பினர் சிவசக்தியானந்தன் கேள்விகளை முன்வைத்துள்ளார்.

அவர் முன்வைத்த கேள்விகளில்

வடகிழக்கு மாகாணங்களில் போரின்போது குண்டுகள்,செல்வீச்சுக்கள் மற்றும் விமான தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டவர்கள் சிறுவர்கள் உட்பட உடலில் ஆபத்தான இராசயன  கலவைகள் அடங்கிய துண்டுகள் உட்சென்றுள்ளனவா என்பது பற்றி தேடிப்பார்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா?

அவ்வாறு ஆபத்தான துண்டுகள் உடலில் இருப்பதானால் எதுவித பாதிப்பும் இல்லையென மருத்துவ சான்றிதழ் வழங்குதல் அல்லது மாற்று நடவடிக்கை எடுப்பதற்கு அரசு பின்பற்றும் வளிமுறைகள் என்ன என்பது பற்றி கேள்வி கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடக்கு கிழக்கில் போர் இடம்பெற்றது மாத்திரம் இல்லாமல்இறுதியுத்தம் இடம்பெற்ற போது வன்னி மக்களுக்கு பாரிய அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளன.

புதிதாக கூறுவதற்கு எதுவும் இல்லை போரின் போது இரண்டு தரப்புக்களும் எறிகளை வீச்சுக்கள் மோட்டார் தாக்குதல்களை நடத்தின.

இதன்போது இலங்கை படையினர் வான்படையை பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இதன்போது சாதாரமக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டது என்பதனை அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர்.

உடலில் துண்டு பாகங்கள் இருப்பது பற்றி இதுவரையில் உத்தியோகபூர்வ முறைப்பாடுகள் எவையும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்த பிரதமர்.

இவ்வாறான சந்தேகம் எவருக்காவது ஏற்படுமாயின் அவர் நாட்டில் உள்ள ஏதாவது அரச மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துகொள்ளமுடியும், அத்துடன் அமைச்சர் சுவாமிநாதன் சுகாதார அமைச்சருடனும் வடமாகாண சபையுடனும்இணைந்து இந்த திட்டங்களை முன்னெடுப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் இந்த தகவலையடுத்து நாடாளமன்ற உறுப்பினர் சிவசக்தியானந்தன் இரண்டாது கேள்வியினை தொடுத்துள்ளார்.

குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான பலர்மாணவர்களாக இருக்கின்றார்கள் ஆயிரம் பேரளவில் மாணவர்களாக காணப்படுகின்றார்கள்.

இதில் பலபேர் பெற்றோரை இழந்த நிலையில் காணப்படுகின்றார்கள் வவுனியாவினை சேர்ந்த பல்கலைக்கழக மாணவன் சென்னை சென்று தனது உடம்பில் உள்ள  6 இடத்தில் உள்ள குண்டு சிதறல்களை அகற்றியுள்ளார் இவருக்கு பெருமளவான இந்திய பணம் செலவாகியுள்ளது.

குறிப்பாக மாணவர்கள் பலர் உறவினர்கள் தாய் தந்தை இல்லாத பொருளாதார நெருக்கடிகள் காணப்படுகின்றது குண்டுகள் அகற்றுவதில் விசேட மருத்துவ நிபுணர்களின் வசதி தேவைப்படுகிறது இலங்கைக்கு வெளியால் சென்னை போன்ற இடங்களில் மருத்துவ சிகிச்சை செய்யவேண்டியுள்ளது அல்லது விசேட மருத்து நிபுணர்களை இலங்கைக்கு வரவளைக்கவேண்டியுள்ளது சிலருடைய உடம்பில் உள்ள குண்டுகள் அகற்றப்படுவதால் உயிராபத்து ஏற்படக்கூடிய நிலமைகள் காணப்படுகின்றது ஆகவே அதற்கேற்ற வசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டும் என்று கோரியுள்ளார்.

இதற்கு பதிலளித்த பிரதமர்.

உடலில் குண்டுகள் காணப்படும் மாணவர்கள் பெருமளவு காணப்படுவதாக நாடாளமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான தகவல்களை நாடாளமன்ற உறுப்பினரும் அமைச்சர் சுவாமிநாதனும் பெற்று அறிக்கை ஒன்றை தயாரிக்குமாறு தெரிவித்துள்ளார்.

இதன்பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் தாம் ஜனாதிபதியுடன் பேசி சுகாதார அமைச்சின் ஊடாக நிபுணர்களை இலங்கைக்கு வரவளைப்பது அல்லது பாதிக்கப்பட்டவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து சென்று சிகிச்சையளிப்பது போன்ற தீர்மானங்களை செலவுகளை மையமாக வைத்து மேற்கொள்ள முடியும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.