Take a fresh look at your lifestyle.

கேரள கஞ்சா அகப்பட்டது

Ganja1காங்கேசன்துறை கடற்கரைபகுதியில் 158 கிலோகிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

பாறைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு காங்கேசன்துறை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

எனினும் இந்தச் சம்பவம் தொடர்பில் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட நிலையில், பாறைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.Ganja3

அண்மைகாலமாக இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கஞ்சா கடத்தும் சம்பவங்கள்அதிகரித்துள்ள நிலையில் இலங்கை கடற்படையினர் தீவிர கண்காணிப்பினை மேற்கொண்டு வருகின்றார்கள்.

கஞ்சா கடத்தலின் மையமாக யாழ்ப்பாணம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.