Take a fresh look at your lifestyle.

கொஸ்கம சாலாவ பகுதிக்குள் நுழைய அனுமதி மறுப்பு

கொஸ்கம சாலாவ படைமுகாமை சூழவுள்ள 500 மீற்றர் பகுதிக்குள் நுளைய தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை படையிரின் ஆயுத களஞ்சியம் அமைந்துள்ள கொஸ்கம சாலாவ படைத்தளத்தில் அண்மையில் ஏற்பட்ட தீவிபத்து சம்பவத்தில் பெருமளவான மோட்டார் எறிகணைகள் மற்றும் பல்குழல் எறிகணைகள், வெடித்து சிதறியுள்ளன.

இதன்மதிப்பீடு அண்ணளவாக இலங்கை ரூபாயில் ஆயிரம் கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இன்னிலையில் வெடித்து சிதறிய வெடிபொருட்களை படையினர் மீட்டு வருகின்றார்கள்.

பிரதேச பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையில் தொடர்ந்தும் படையினர் வெடித்து சிதறிய வெடிபொருட்களை இனம்கண்டு சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள் இன்னிலையில் குறித்த படைமுகாமினை சூழவுள்ள 500 மீற்றர் பகுதிக்குள் எவரும் நுளைய வேண்டாம் என்று படையினர் தடை விதித்துள்ளார்கள்.

2009 ஆம் ஆண்டு இறுதிகட்ட போரின் பின்னர் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் வெடிபொருட்களின் சிதறல்கள் குறிப்பாக எறிணைகளின் கோதுகளை எடுத்த இரும்பு வியாபாரிகள்விற்பனை செய்வதன் ஊடாக அதிகளவான பணத்தினை ஈட்டியுள்ளார்கள் இதில் குறிப்பாக பல்குழல் எனப்படும் மல்லரிபரல் எறிகணையின் கோது மிகவும் பெறுமதியானது இன்னிலையில் சாலாவ படைமுகாமில் வெடித்து சிதறிய வெடிபொருட்களின் பாகங்களை மக்கள் உள்ளிட்டவர்கள் எடுத்து இரும்பு வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளார்கள்.

பாதுகாப்பு பிரிவின் இந்த அறிவுறுத்தலை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.