Take a fresh look at your lifestyle.

தமிழ்மக்கள் சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்றால் பிரச்சனைகளை தவிர்த்துக்கொள்ளலாம்

வடக்கில் உள்ள தமிழ்மக்கள் சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்றால் பிரச்சனைகளை தவிர்த்துக்கொள்ளலாம் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

வடக்கில் மாணவர்கள் மத்தியில் சமயம் சார்ந்த விடயங்களுடன் தன்னம்பிக்கை ஏற்படுமாயின் ஒழுக்கத்திற்கு அது வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் இளம் மாணவர்களின் கலாச்சாரம் பின்நோக்கி தள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் முதலமைச்சர் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

மக்கள் மத்தியில் மனிதாபிமானம் மதிக்கப்படவேண்டும்,நாம் சிங்கள மக்கள் தலைவர்கள் எங்களை மதிக்கவேண்டும் என்று எதிர்பாக்கின்றோம் முதலில் எம்மக்களை நாம் மதிக்க நாம் கற்றுக்கொள்ளவேண்டும் மாணவர்களுக்கு சிறு அகவையில் இருந்தே சமய ஒழுக்கத்துடன்கூடிய கல்வி அறிமுகப்படுத்தவேண்டும் சமயவாழ்க்கை என்பது ஆணவம் தவிர்ந்த வாழ்க்கை இறைவன் இருக்கின்றான் என்று எமது மனதில் பதிந்துவிட்டால் ஆணவம் தானாகவே எம்மைவிட்டு நீங்கிவிடும் தன்னம்பிக்கை வேறு ஆணவம் வேறு இறைபக்தியுடன் சேர்ந்த தன்னம்பிக்கை எமக்கு வேண்டும் தன்னையே முதன்மைப்படுத்தும் ஆணவம் அழியவேண்டும் அது நடந்தால் எமது சமூகம் மாறிவிடும் ஒழுக்கம் தானாக வேரூன்ற தொடங்கிவிடும் என்றும் தெரிவித்த அவர்.

எமது இலங்கை வாழ் மக்களிடையே ஐயமும், சந்தேகமும், அவநம்பிக்கையும், ஆத்திரமும், ஏற்பட முக்கிய காரணம் தவறான புரிதலாகும், இரு மொழி பேசும் மக்களிடையே புரிந்துணர்வு ஏற்பட வேண்டுமானால் ஒருவர் மொழியை ஒருவர் கற்க வேண்டும் இன்று சிங்கள மாணவர்கள் கட்டாயமாக தமிழ் படிக்க தொடங்கியுள்ளார்கள்.

விரைவில் தமிழ்பேசும் சிங்கள அலுவலகர்கள் வடகிழக்கு மாகாணங்களுக்கு அனுப்பப்படபோகின்றார்கள் நாங்கள் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கைகளில் இறங்கவேண்டும் சிங்கள அறிவு இல்லாதவர்கள் வருங்காலத்தில் புறக்கணிக்கப்படக்கூடும், அரசியலை மறந்து சிங்கள் மொழியாற்றலையும் விருத்திசெய்யுங்கள் என்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.