Take a fresh look at your lifestyle.

மீனவர்களை விடுதலை செய் – தமிழக முதல்வர் கோரிக்கை

இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யவேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வர் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக மீனவர்கள் விவகாரம் குறித்து கடந்த இரண்டு வாரங்களில் 3 கடிதங்களை தமிழக முதல்வர் இந்தியபிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ளார்.

கடந்த 4 ஆம் நாள் இலங்கை கடற்படையினரால் 4 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இலங்கையில் தற்போது 15 தமிழக மீனவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதை கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இந்திய மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க பிரதமர் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக முதல்வராக மீண்டும் ஜெயலலிதா பதவி ஏற்றதன் பின்னர் தமிழக மீனவர்கள் தொடர்பான விடயத்தில்முக்கிய கவனம் செலுத்தப்பட்டு வருகின்றமை இலங்கை அரசிற்கு பெரும் அழுத்தமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.