Take a fresh look at your lifestyle.

வாகனங்களை கொள்வனவிற்கு எதிர்ப்பு

அமைச்சர்கள் 30 பேருக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக 118 கோடி ரூபா குறைநிரப்பு பிரேரணை நாடாளமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ள தருணத்தில் இவ்வாறான குறைநிரப்பு பிரேரணையினை சமர்ப்பித்தது நியாயமற்ற விடயம் என எதிர்கட்சியினர் தெரிவித்துள்ளார்கள்.

22 அமைச்சுக்களைச் சேர்ந்த அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் 30 பேருக்கு புதிய வாகனங்களை கொள்வனவு செய்தற்றாக 118 கோடி ரூபா செலவில் இந்த குறைநிரப்பு பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.