Take a fresh look at your lifestyle.

கிளிநொச்சி பகுதியில் மாமியாரைத் தாக்கிய மருமகன்….

கிளிநொச்சி இரணைமடு பகுதியில் இருபதாயிரம் ரூபா பெறுமதியான கைத்தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இராணுவச்சிப்பாயினை கடும் நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் செல்லுமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி இரணைமடுப்பகுதியில் கடந்த மாதம் 16ம் திகதி இருபதாயிரம் ரூபா பெறுமதியான கைத்தொலைபேசியொன்று களவாடப்பட்டமை தொடர்பாக பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து இதனை தனது உடமையில் வைத்திருந்த ஒருவரை கைது செய்து நீதிமன்றில் ஆயர்படுத்தியதுடன் அவரது தகவல்களைக் கொண்டு இரணைமடு இராணுவ முகாமில் கடமையாற்றும் இரு இராணுவச்சிப்பாய்கள் கைது செய்யப்பட்டு கடந்த மாதம் 13ம் திகதி கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் தோன்றியதையடுத்து  தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரு இராணுவச்சிப்பாய்களில் ஒரு இராணுவச்சிப்பாய் கடந்த 27ம்திகதி கிராம அலுவலரின் வதிவிடத்தை உறுதிப்படுத்திய இரு ஆட்பிணைகளில் செல்லுமாறும் மற்றைய இராணுவச்சிப்பாயினை நேற்று வரை (08-06-2016) விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மற்றைய இராணுவச்சிப்பாய் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு ஆட்பிணைகளில் செல்லுமாறும் இதில் ஒரு பிணையாளி அரச உத்தியோகத்தராக இருக்கவேண்டும் அத்துடன் பிணையாளி சந்தே நபர் ஆகியோரின் வதிவிடத்தை கிராம அலுவலரின் உறுதிப்படுத்தல் வேண்டும் என்றும் பிரதி வெள்ளிக்கிழமை கிளிநொச்சி மாவட்ட நீதிவான்நீதிமன்றில் அறிக்கையிட வேண்டும் என்றும் கடும் நிபந்தனைகளுடன் கூடிய பிணைகளில் செல்லுமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-

கிளிநொச்சி வட்டக்கச்சிப்பகுதியில் ஐந்தாவது தடவையாக நான்கு போத்தல் கசிப்புடன் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு மாத கால கட்டாயச்சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வட்டக்கச்சிப்பகுதியில் நான்கு போத்தல் கசிப்பினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்று முன்தினம் (07-06-2016) பெண்ணொருவரை கைது செய்த கிளிநொச்சிப் பொலிசார் குறித்த பெண்ணை நேற்றைய தினம் (08-06-2016) பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆயர்படுத்தியதையடுத்து குறித்த பெண் ஏற்கனவே நான்கு தடவைகள் கசிப்புடன் கைது செய்யப்பட்டு எழுபத்தி ஐயாயிரம் ரூபா ஆயிரத்து 5- ரூபா, பதினையாயிரம் ரூபா, பத்தாயிரம் ரூபா என நான்கு தடவையும் தண்டப்பணம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டபோதும் மீளவும் நேற்று முன்தினம் (07-06-2016) 4ம் போத்தல் கசிப்புடன் கைது செய்யப்பட்டதை அவதானித்த மன்று ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் இரண்டு மாத கால சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-

கிளிநொச்சி முரசுமோட்டை ஐயன்கோவிலடி பகுதியில் மூன்று போத்தல் கசிப்புடன் கைது செய்யப்பட்டவருக்கு பதினையாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் சமுதாயம் சார் திருத்த கட்டளையின் கீழ் ஏழு நாள் சமுக சேவையில் ஈடுபடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி முரசுமோட்டை ஐயன்கோவிலடிப்பகுதியில் மூன்று போத்தல் கசிப்புடன் நேற்று முன்தினம் (07-06-2016) கிளிநொச்சி பொலிசார் கைது செய்த ஒருவரை நேற்றைய தினம் (08-06-2016) பிற்பகல் கிளிநொச்சி மாவட்டநீதிவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆயர்படுத்திதையடுத்து குறித்த குற்றவாளிக்கு பதினையாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் சமுதாயம் சார் சீர் திருத்த கட்டளைச்சட்டத்தின் கீழ் ஏழு நாட்கள் சமுக சேவைகளில் ஈடுபடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-

கிளிநொச்சிப் பளை ஆகிய பகுதிகளில் மது போதையில் பொது இடங்களில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டமை தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு பேருக்கு தலா மூவாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் ஏழு நாட்கள் சமுக சேவைகளில் ஈடுபடுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி மற்றும் பளை பூநகரி ஆகிய பகுதிகளில் மதுபோதையில் பொது இடங்களில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட நான்கு பேரை கைது செய்த பொலிசார் குறித்த நபர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து குறித்த நான்கு பேரையும் நேற்றைய தினம் (08-06-2016) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தரஜா முன்னிலையில் ஆயர்படுத்தியதையடுத்து குறித்த நான்கு பேருக்கும் தலா மூவாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் சமுதாயம் சார் சீர் திருத்த கட்டளைச்சட்டத்தின் கீழ் ஏழு நாட்கள் சமுக சேவைகளில் ஈடுபடுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-

கிளிநொச்சி மற்றும் பளை ஆகிய பகுதிகளில் அனுமதிப்பத்திரமின்றியும் அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறியும் மணல் ஏற்றிய ஐந்து பேருக்கு ஒரு இலட்சத்து எண்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயத்திற்குள் அனுமதிப்பத்திரமின்றி உட்புகுந்து உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிய உழவு இயந்திரத்தினையும் அதன் சாரதியையும் கைது செய்த வனவள திணைக்கள  அதிகாரிகள் குறித்த நபரை நேற்றைய தினம் (08-06-2016) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆயர்படுத்தியதையடுத்து நாற்பத்தி ஐயாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பளைப்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றியவருக்கு இருபத்தி ஐயாயிரம் ரூபாவும் டிப்பர் வாகனத்தில் அனுமதிப்பத்திரமின்றி டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றியவருக்கு நாற்பதாயிரம் ரூபாவும் கிளிநொச்சி பகுதியில் உழவு இயந்திரத்தில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிய சாரதிக்கு முப்பதாயிரம் ரூபாவும் டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றியவருக்கு நாற்பதாயிரம் ரூபாவும் என ஒரு இலட்சத்து எண்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மற்றும் பளை ஆகிய பகுதிகளில் வனவள திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிசாரால் கைது செய்யப்பட்ட ஐந்து வாகனங்களும் அதன் சாரதிகளும் நேற்றைய தினம் (08-06-2016) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆயர்படுத்தியதையடுத்து ஒரு இலட்சத்து எண்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் மணல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-

கிளிநொச்சி பகுதியில் பாலியல் துன்புறுத்தல் வழக்குகளுடன் தொடர்புபட்ட சாட்சியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கிராம அபிவிருத்திச் சங்க  தலைவர் செயலாளர் பொருளாளர் ஆகிய மூவரையும் தலா ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான இரு ஆட்பிணைகளில் செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதியில் யுவதியொருவருக்கு பாலியல் துன்புறுத்தல் மேற்கொள்ளப்பட்டதாக கிளிநொச்சிப் பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினையடுத்து இவ்வழக்குடன் சம்பந்தப்பட்ட நான்கு சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு மூன்று சந்தேக நபர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்குடன் தொடர்புபட்ட சாட்சியான யுவதியை குறித்த வழக்கை வாபஸ் பெறுமாறு அப்பகுதி கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் செயலாளர் பொருளாளர் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக குறித்த யுவதி மன்றில் தெரிவித்ததையடுத்து குறித்த மூவரையும் உடனடியாக கைது செய்து மன்றில் முன்னிலைப்படுத்துமாறு மன்று உத்தரவிட்டதைத் தொடர்ந்து குறித்த மூவரும் 18 நாட்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டு நேற்றைய தினம் (08-06-2016) ஒவ்வொருவரையும் தலா ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான இரு ஆட்பிணைகளில் செல்லுமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-

கிளிநொச்சி பூநகரி பகுதியில் உழவு இயந்திரத்தில் ஏழு முதிரை மரக்குற்றிகளைக் கொண்டு சென்றவரை ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான இரு ஆட்பிணைகளிலும் உழவு இயந்திரத்தை ஒரு மில்லியன் ரூபா பிணை முறியிலும் கொண்டு செல்லுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி பூநகரி பகுதியில் ஏழு முதிரை மரக்குற்றிகளை உழவு இயந்திரத்தில் ஏற்றிச்சென்ற ஒருவரை கைது செய்த பூநகரி பொலிசார் நேற்றைய தினம் (08-06-2016) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆயர்படுத்திதையடுத்து உழவு இயந்திரத்தின் சாரதியை ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான இரு ஆட்பிணைகளிலும் உழவு இயந்திரத்தை ஒரு மில்லியன் ரூபா பிணைமுறியிலும் கொண்டு செல்லுமாறும் முழுமையான விசாரணைகளுக்கு எதிர்வரும் யூலை மாதம் 7ம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-

கிளிநொச்சி பளைப்பகுதியில் மாமியாரை தாக்கிய மருமகனை ஐம்பதாயிரம் ரூபா பிணையில் செல்லுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி பளைப்பகுதியில் கடந்த 5ம் திகதி குடிபோதையில் மாமியாரைத் தாக்கிய மருமகனை கைது செய்த பளைப்பொலிசார் குறித்த சந்தேக நபரை கடந்த 6ம் திகதி திங்கட்கிழமை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆயர்படுத்தியதையடுத்து குறித்த மருமகனை 8ம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டு நேற்றைய தினம் (08-06-2016) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆயர்படுத்தியதையடுத்து குறித்த சந்தேக நபரை ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான ஆட்பிணைகளில் செல்லுமாறும் யூலை மாதம் 20ம் திகதி முழுமையான விசாரணைகளுக்கு தவணையிடப்பட்டுள்ளது,

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-

கிளிநொச்சிப் பளைப்பகுதியில் அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறி 17 பனை மரத்தீராந்திகளை உடமையில் வைத்திருந்தவருக்கு நாற்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பளைப்பகுதியில் பொலிசாரின் சுற்றிவளைப்பின்போது அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறி 17 பனைமரத்தீராந்திகளை வைத்திருந்த ஒருவரைகைது செய்து நேற்றைய தினம் (08-06-2016) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆயர்படுத்தியதையடுத்து குறித்த குற்றவாளிக்கு நாற்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-

கிளிநொச்சி மற்றும் பளை ஆகிய பகுதிகளில் வீதி ஒழுங்கு விதிகளை மீறியும் உரிய ஆவணங்கள் இன்றியும் வாகனங்களை செலுத்திய ஏழு பேருக்கு இருபத்தி ஒன்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பளைப்பகுதியில் தவறான முறையில் முந்திச் சென்ற ஒருவருக்கு மூவாயிரம் ரூபாவும் கவனயீனமான முறையில் விபத்து ஒன்றை தடுக்காமல் வாகனம் செலுத்தியவருக்கு ஐயாயிரம் ரூபாவும் சாரதியனுமதிப்பத்திரம் காப்புறுப்பத்திரம் வரிப்பத்திரம் என்பன இன்றி வாகனம் செலுத்தியவருக்கு பதினான்காயிரம் ரூபாவும் தவறான முறையில் முந்திச்சென்றவருக்கு மூவாயிரம் ரூபாவும் தவறான முறையில் லொறிவாகனத்தை செலுத்தியவருக்கு மூவாயிரம் ரூபாவும் காப்புறுதிப்பத்திரமின்றி மோட்டார் சைக்கிள் செலுத்தியவருக்கு ஆயிரம் ரூபாவும் தவறான முறையில் ஒருவரை ஏற்றிச்சென்றவருக்கு ஐநூறு ரூபாவும் என மேற்படி கிளிநொச்சி பளை ஆகிய பகுதிகளில் உரிய ஆவணங்கள் இன்றியும் வீதி ஒழுங்கு விதிகளை மிறியும் வாகனம் செலுத்தியவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் (08-06-2016) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆயர்படுத்தியதையடுத்து இருபத்தி ஓன்பதாயிரத்து ஐநூறு ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-

கிளிநொச்சி பளை ஆகிய பகுதிகளில் மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகளின் சாரதியனுமதிப்பத்திரங்கள் இரண்டு வார காலம் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மற்றும் பளை ஆகிய பகுதிகளில் மதுபோதையில் வாகனம் செலுத்திய மூன்று சாரதிகளை கைது செய்து அவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்த பொலிசார் நேற்றைய தினம் (08-06-2016) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏஆனந்தராஜா முன்னிலையில் ஆயர்படுத்தியதையடுத்து தலா ஏழாயிரத்து ஐநூறு ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் சாரதியனுமதிப்பத்திரங்கள் இரு வார காலத்திற்கு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை மதுபோதையில் வாகனம் செலுத்தியவருக்கு ஏழாயிரத்து ஐநூறு ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் மூன்று வார காலத்திற்கு சாரதியனுமதிப்பத்திரம் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.