Take a fresh look at your lifestyle.

நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து தமிழ்தேசிய கூட்டமைப்பு கலந்தாய்வு!

இலங்கை நாடாளமன்றத்தில் இன்று கொண்டுவரப்படவுள்ள நிதிஅமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது கூட்டமைப்பு ஆதரவளிப்பாதா இல்லையா என்பது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மதியத்திற்குள் இது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நாடாளமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கல நாதன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை 9.30 மணிக்கு இலங்கை நாடாளமன்றம் கூடியுள்ளது நாடாளமன்ற அமர்வுகளில் பங்கு கொள்ளும் தமிழ்தேசியக்கூட்டமைப்பினர் தற்போது கூடி ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.