Take a fresh look at your lifestyle.

வடமாகாண அமைச்சர் ஜங்கரநேசனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ?

வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஜங்கரநேசனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றினை கொண்டுவருவதற்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமாகாண சபை தரப்புக்கள்தெரிவிக்கின்றன.

வடக்கு மாகாணசபை உறுப்பினர்களின் நான்கு பேர் இந்த முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாகவும்,அவர்கள் ஏனைய உறுப்பினர்களிடம் இது தொடர்பில் கலந்துரையாடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வடமாகாண சபையின் நிர்வாகம் இரண்டரை ஆண்டு காலத்தை எட்டியிருப்பதால் நான்கு அமைச்சர்களையும் மாற்றவேண்டும் என்று ஏற்கனவே வடமாகாணசபையின் பிரதி தவிசாளர் அன்ரனி ஜெகநாதன் கோரியுள்ளார்.

இன்னிலையில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஜங்கரநேசன் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக வடமாகாண சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

விவசாய அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையினை முன்வைக்கும் செயற்பாட்டில்  தமிழ்தேசியக்கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளை சேர்ந்த சில நாடாள மன்ற உறுப்பினர்கள் செயற்படுவதாக கட்சி மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகாண சபையின் எதிர்கட்சி தலைவர் சி. தவராசா இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவிக்கையில் மாகாண சபையின் செயற்பாடுகள் செயற்திறன் அற்று காணப்படுகின்றது என்பதை நான் ஆதாரங்களுடன் மாகாணசபை விவாதங்களில் எடுத்து காட்டிக்கொண்டு வருகின்றேன்.

ஆனால் தற்போது நடக்கின்ற செயற்பாடுகள் ஒட்டுமொத்தமாக மாகாண சபையின் செயற்பாட்டை வினைத்திறன் ஆக்குவதற்கல்ல இது தனிப்பட்ட சில கோபதாபங்கள் தங்களுடைய உட்கட்சி பிரச்சனைகளை வைத்துக்கொண்டு ஒரு ஆளுக்கு எதிராக பிரேரணை கொண்டு வருவதாக அறிந்துள்ளேன்.

உட்கட்சி பூசல்களுக்காக மாகாணசபையினை பலியாக்குவது ஏற்றுக்கொள்ளத்தக்க விடயம்அல்ல இவ்வாறான விடயங்களில் நான் கலந்துகொள்ள போவதில்லை என்றும் சி.தவராசா தெரிவித்துள்ளார்.

வடக்கில் வடமாகாண சபை அமைச்சர் பொ.ஜங்கரநேசன் நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் வடக்கு மக்கள் பேசி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.