Take a fresh look at your lifestyle.

நாளை, கிளிநொச்சி வைத்தியசாலை நோயாளர் நலன்புரிசங்க பொதுக்கூட்டம்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரி சங்கத்தின் பொதுக்கூட்டமும் நிர்வாக சபை தெரிவும் நாளை சனிக்கிழமை (11-06-2016) நடைபெறவுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச்சங்கத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபைத்தெரிவும் சனிக்கிழமை (11-06-2016) பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்ட பொது வைத்தியசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இதில் புதிய நிர்வாகத்தெரிவு நோயாளர் நலன்புரிச்சங்க யாப்பு உருவாக்கம் ஆகிய விடயங்கள் பிரதானமாக கலந்துரையாடப்படவுள்ளன என்றும் நலன்புரிச்சங்க அங்கத்தவர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு நோயாளர் நலன்புரிச்சங்க நிர்வாகம் கேட்டுள்ளது.