Take a fresh look at your lifestyle.

முட்கொம்பன் காட்டுப்பகுதியில் சட்டவிரோத காடழிப்பை நிறுத்து!

கிளிநொச்சி முட்கொம்பன் காட்டுப்பகுதியில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத காடழிப்பை தடுத்து நிறுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி முட்கொம்பன் காட்டுப்பகுதியில் தினமும் பெறுமதி வாய்ந்த காட்டு மரங்கள் வெட்டப்பட்டு காடழிப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறு இடம்பெறும் காடழிப்புக்களை கட்டுப்படுத்த வேண்டிய அதிகாரிகள் இது தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்வதில்லை என்றும் சில அதிகாரிகளின் துணையுடனே இவ்வாறான காடழிப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.

எனவே இதனைத் தடுப்பதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதாவது பகல் வேளைகளில் இயந்திரங்கள் மூலம் பெறுமதிவாய்ந்த பாலை முதிரை உள்ளிட்ட மரங்கள் வெட்டப்பட்டு கனரக வாகனங்களில் ஏற்றப்பட்டு யாழ்ப்பாணம் கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு எந்தவித அனுமதிப்பத்திரங்களுமின்றி பகல் வேளைகளிலும் இரவு வேளைகளிலும் கொண்டு செல்லப்படுகின்றன.

இவ்வாறான மரக்கடத்தல்கள் அதிகாரிகளினது துணையுடனேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் இதனை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இப்பகுதி மக்கள் தமது வீட்டுத்திட்ட தேவைகளுக்கான மரங்களையோ அல்லது கட்டுமானத்தேவைகளுக்கான மணலையோ பெற்றுக்கொள்ளமுடியாத நிலை காணப்படுகின்றபோதும் இவ்வாறு பெறுமதிவாய்ந்த காட்டு மரங்கள் எவ்வாறு வெளியிடங்களுக்கு கொண்டு செல்ல முடியும் என்றும் இப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.