Take a fresh look at your lifestyle.

இராணுவமயமாக்கல் தொடர்கிறது

_DSC0123தமிழர் தாயகத்தில் சிறிலங்கா இராணுவம் காலூன்றும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் நிலையில், பெரும்பான்மையாக தமிழர்களை இணைத்து விருசர எனும் நலன்புரி திட்டத்தை சிறிலங்கா இராணுவம் இன்றைய தினம் யாழில் ஆரம்பித்துள்ளது. இத்திட்டத்தினை யாழ் மாவட்ட இராணுவ பாதுகாப்பு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.

யாழ்ப்பாணம் நகரப்பகுதியை அண்டிய இராணுவமுகாமில் உள்ள திறந்த வெளியரங்கில் இத்திட்டத்தை பிரதம விருந்தினராக தளபதி கலந்து_DSC0132 கொண்டு முதன் முதலாக ஆரம்பித்து வைத்தார். இதன் போது 100க்கு அதிகமான பல்வகை இராணுவ மற்றும் ஏனைய பாதுகாப்பு சேவையை சேர்ந்த இளைப்பாறிய,இடைவிலகிய அதிகாரிகள், தமிழ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அரச பாதுகாப்பு சேவையில் கடந்த காலங்களில் இணைந்து நாட்டிற்காக உயிரினை அர்ப்பணித்து போராடியவர்கள் எனவே அவர்களை இத்திட்டத்தின் மூலம் கௌரவிப்பது எமது ஒவ்வொருவரது கடமையாக உள்ளதை தனது உரையில் கட்டளை தளபதி சுட்டிக்காட்டினார். இந்த திட்டத்தின் மூலம் ஓய்வு பெற்ற தமிழ் இராணுவ சிப்பாய்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவினர் என்போர்க்கு விசேட நிதியுதவி மற்றும் விசேட அடையாள அட்டை என்பன வழங்கப்பட்டு, தமிழ் இளைஞர் யுவதிகளை சிறிலங்கா இராணுவத்திற்குள் உள்ளீர்க்கும் இரகசிய திட்டத்தை இராணுவம் மேற்கொண்டுள்ளதாக சுட்டிக்கட்டப்பட்டுள்ளது.

_DSC0154_DSC0143_DSC0137_DSC0112_DSC0096