Take a fresh look at your lifestyle.

அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக நிதி

கிளிநொச்சி மாவட்டத்தின் 2016ம் ஆண்டில் நான்காயிரத்து 501 அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக சுமார் ஐயாயிரத்து 553.26 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப்பெற்றுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு வகையான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த சனிக்கிழமை (11-06-2016) அன்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் மாவட்ட அரச அதிபர் அவர்கள் 2016ம் ஆண்டில் பல்வேறு துறைசார்ந்த சுமார் நான்காயிரத்து 501 அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக ஐயாயிரத்து 553.26 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இதில் நீர்ப்பாசன அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக மூவாயிரத்து 321.6 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.

அதாவது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள்குடியேற்றம், மற்றும் தேசியகொள்கைத்திட்டமிடல் அமைச்சு, மாகாணசபை, தெங்குபயிர்செய்கை சபை கமநலஅபிவிருத்தி திணைக்களம், கல்வி அபிவிருத்தி நன்னீர் மீன்பிடிஅமைச்சு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, சுகாதார அமைச்சு, மற்றும் வெளிநாட்டு நிதிகள் என பல்வேறு வகையான நிதிகள் 2016ம் ஆண்டின் அபிவிருத்தி வேலைக்களுக்காக கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது,

கடந்த கால யுத்தம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு கட்டுமானங்கள் அழிவடைந்ததுடன் பாரிய தொழிற்சாலைகளாக காணப்பட்ட ஆனையிறவு, உப்பளம் பரந்தன் இரசாயனத்தொழிற்சாலை என்பனவும் முழுமையாக செயலிழந்துள்ளன. அத்துடன் கிராமிய வீதிகள் பிரதான வீதிகள் என்பனவும் சேதமடைந்து காணப்படுகின்றன. இவற்றின் அபிவிருத்திக்காக பல்லாயிரம் மில்லியன் ரூபா நிதி தேவையுள்ளமை குறிப்பிடத்தக்கது,