Take a fresh look at your lifestyle.

பயனாளிகள் தெரிவுகள் உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டவில்லை

கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதேச செயலகங்கள் ஊடாக வாழ்வாதார உதவிகளுக்காக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் பெயர் விபரங்கள் காட்சிப்படுத்தப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்ற அமைச்சினூடாக ஆயிரத்து 600 பயனாளிகளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்குவதற்கான பயனாளிகள் தெரிவுகள் நடைபெற்றுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்ற அமைச்சினூடாக ஆயிரத்து 600 பயனாளிகளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்குவதற்கான பயனாளிகள் தெரிவுகள் நடைபெற்றுள்ளன.

இவ்வாறு பயனாளிகள் தெரிவுகள் உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டவில்லை என்றும் பயனாளிகள் பட்டியல்கள்  காட்சிப்படுத்தப்படவில்லை என்றும் பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதி நிதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பயனாளிகள் தெரிவு தொடர்பில் மாகாண சபை உறுப்பினர்கள் வை.தவநாதன், சு.பசுபதிப்பிள்ளை, ஆகியோர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஆகியோர் எழுப்பிய கேள்விகளின் போது கண்டாவளைப்பிரதேச செயலாளர் ரீ.முகுந்தன் அவர்கள் எந்தவித அரசியல் தலையீடுகளும் இன்றி இந்த பயனாளிகள் கண்டாவளைப்பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்டு பெயர் பட்டியல்கள் கிராம அலுவலக ரீதியாக காட்சிப்படுத்தப்பட்ட போது முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.

அதனை பரிசீலித்து அதன்படி பயனாளிகளை தெரிவு  செய்து மாவட்ட செயலகத்திற்கு  அனுப்பி வைக்கப்பட்டன என அவர் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதனைவிட ஏனைய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இது காட்சிப்படுத்தப்படவில்லை என பல்வேறு தரப்புக்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.