Take a fresh look at your lifestyle.

பொலிஸார் அதிரடியாகக் கைது

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 18 பேர், இன்று செவ்வாய்க்கிழமை (14.06-2016) அதிகாலை 4 மணி தொடக்கம் காலை 6 மணி வரையான காலப்பகுதியில் கிளிநொச்சி பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டு, அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த போதும், அந்த வழக்குகளுக்கு சமுகமளிக்காமல் இருந்த 18 நபர்களுக்கும் எதிராக கிளிநொச்சி நீதிவான் நீதி மன்றத்தால் திறந்த பிடியாணை  பிறப்பிக்கப் பட்ட நிலையில் இவர்களைக் கைதுசெய்யும் பொருட்டு  நடவடிக்கை மேற்கொண்ட பொலிஸார், அனைவரையும் இன்று(14-06-2016) கைது செய்தனர். இதனையடுத்து இவர்களை இன்றையதினம் (14-06-2016) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ ஆனந்தராஜா முன்னிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.