Take a fresh look at your lifestyle.

மாணவர்கள் பாடசாலை விட்டு விலகல்

கிளிநொச்சி இராமநாதபுரம் கிழக்குப்பகுதியில் 67 மாணவர்கள் பாடசாலை கல்வியை விட்டு இடைவிலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் நகர் புறப்பாடசாலைகள் தவிர்ந்த பின் தங்கிய பாடசாலைகளின் மாணவர்கள் பாடசாலைக்கல்வியை விட்டு இடைவிலகும் நிலை காணப்படுகின்றது. குறிப்பாக குடும்பங்களில் நிலவும் வறுமை, தொழில்கள் இல்லாத நிலை, குடும்ப வன்முறைகள் உள்ளிட்ட விடயங்கள் இவற்றுக்கு காரணமாக அமைவதாக சமுக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கிளிநொச்சி இராமநாதபுரம் கிழக்குப்பகுதியில் 67 மாணவர்கள் பாடசாலைக் கல்வியை விட்டு இடைவிலகியுள்ளதாகவும் இவர்களை மீள இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கிளிநொச்சி வலயக்கல்வி திணைக்கள நிர்வாகம் தெரிவித்துள்ளது.