Take a fresh look at your lifestyle.

மீள்குடியேறியுள்ள கும்பங்களுக்கு மேலதிக வீடுகள் தேவை

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறியுள்ள பதினையாயிரத்து 439 கும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கவேண்டிய தேவையுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த யுத்தம் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேறியதை தொடர்ந்து அவர்களுக்கான வீட்டுத்திட்ட வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் கடந்த 2009ம் ஆண்டு முதல் மீள்குடியேறிய மக்களுக்கு பல்வேறு வீட்டுத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

அதாவது நாற்பத்தி ஓராயிரத்து 631 வீடுகள் தேவையாக காணப்பட்டன. இதில் பல்வேறு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் மூலம் இருபத்தி ஆறாயிரத்து 192 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் பதினையாயிரத்து 439 வீடுகள் அமைக்கப்பட வேண்டிய தேவைகள் காணப்படுகின்றன.

2016ம் ஆண்டில் மீள்குடியேற்ற அமைச்சினூடாக ஆயிரத்து 35 வீடுகள் அமைக்கப்படவுள்ளன.

அவற்றுக்கான நிதியொதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் 750 வீடுகள் கட்டித்தருவதற்கு உறுதி மொழிகள் வழங்கப்பட்டள்ளன.

இதேவேளை இன்னும் சில வெளிநாட்டு உதவிகளுடன் மேலும் சில வீடுகள் இடைப்பதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன எனவும் தெரிவித்த மாவட்ட அரச அதிபர் அவர்கள் மீள்குடியேறியுள்ள 63 சதவீதமான மக்களின் வீட்டுத்தேவைகள் பூர்த்தியாக்கப்பட்டுள்ளன.  இன்னும் 37 சதவீதமான மக்களின் வீட்டுத்தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.