Take a fresh look at your lifestyle.

மகிந்தவின் பெயரில் ஆய்வு கூடம் திறந்து வைத்தார் இராதாகிருஸ்ணன்

முல்லைத்தீவு மாவட்டத்தின்முத்துஜயன்கட்டு வலதுகரை மகாவித்தியாலயத்தின் மகிந்தோதயா தொழிநுட்ப ஆய்வு கூடமானது கல்வி இராஜாங்க அமைச்சர், திரு. வே. இராதாகிருஸ்னன் அவர்களால் நேற்று திறந்தவைக்கப்பட்டது. மகிந்தவின் உதயம் எனத் தொனிப்படும் மகிந்தவோதய ஆய்வுகூடம் மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் மகிந்த இராஜபக்சேவினால் திறந்து வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்திய கலாநிதி சி. சிவமோகன், திருமதி சாந்தி சிறீஸ்கந்தராஜா மற்றும் வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் உள்ளிட்ட அதிதிகள் பாடசாலை சமூகத்தினர் எனபலரும் கலந்துகொண்டனர்.

 

அதே முல்லைத்தீவு மண்ணிலேயே இதே மகிந்த பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்தார்.  இன்று அதே மண்ணில் அவரின் பெயரில் ஆய்வுகூடங்கள் திறந்துவைக்கப்படுவதானது, மக்களின் மனங்களை சிங்கள தேசம் புரிந்து கொள்ளவில்லை என்பதையே வெளிப்படுகிறது. 2009ற்குப் பின் மாணவர்கள் மத்தியில் தேசிய உணர்வை மழுங்கடிப்பதற்காக இவ்வாறன செயற்பாடுகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.