Take a fresh look at your lifestyle.

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் சீனா ஆதிக்கம்

தமிழர்கள் அதிகம் வசிக்கும் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வருகிறது.

இலங்கை உள்நாட்டு போரில் வடக்கு மாகாணம் அதிகம் பாதிக்கப்பட்டது. இங்கு தமிழர்கள் அதிகம் வசிக்கிறார்கள்.  இந்த மாகாணத்தின் முதல்வராக விக்னேஸ்வரன் உள்ளார்.

சீன தூதர் யீ சைன்லியங்க் வடக்கு மாகாணத்தில் நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவர் அம்மாகாண முதல்வர் விக்னேஸ்வரனையும் ஆளுனர் றெஜினோல்ட் கூரேவையும் சந்தித்து பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் சீனா தொழில் முதலீடுகள் செய்வதற்காக இந்த சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையே வரலாற்று உறவு உள்ளது. இலங்கை உடனான நட்புறவை வளர்ப்பதில் சீனா அதிக ஆர்வம் காட்டி வருகிறது.

இலங்கைகான சீன தூதர் யீ சைன்லியங்க் வடக்கு மாகாணத்தில் நான்கு நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவரது பயணத்தில் அம்மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் மற்றும் கவர்னர் றெஜினால்ட் கூரேவை அவர் சந்தித்து பேசினார்.

அந்த சந்திப்பில் வடக்கு மாகாணத்தின் வளர்ச்சிக்கு சீன உதவும் என உறுதி அளித்துள்ளார்.

2009 ம் ஆண்டு உள்நாட்டுப்போர் முடிவடைந்தது. இதில் வடக்கு மாகாணம் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பின்னர் அம்மாகாணத்தில் அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சிகள் நிகழ்ந்து வருவதை சீனா மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.

வடக்கு மாகாணத்தில் சீன தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது.

இதன் மூலம் வடக்கு மாகாணத்தில் உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் சீனா உதவ திட்டமிட்டுள்ளது.

இலங்கையில் சீன ஆதிக்கத்தால் இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரிக்கும் என செய்தி ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.