Take a fresh look at your lifestyle.

ஒலுமடு துணுக்காய் விவசாயிகள் மழையினால் பாதிப்பு

ஒலுமடு துணுக்காய் ஆகிய கமநல சேவை நிலையங்களுக்குட்பட்ட பிரதேசங்களில் சிறுபோக நெற் செய்கை உப உணவு பயிர்ச்செய்கை ஆகியவற்றில் ஈடுபட்ட விவசாயிகள் அண்மையில் பெய்த மழையை அடுத்து 826 ஏக்கரில் நெற் பயிர்செய்கை அழிவையும் 218 ஏக்கரில் உப உணவு பயிர்செய்கை அழிவையும் சந்தித்துள்ளதாக ஒலுமடு துணுக்காய் ஆகிய கமநலசேவை நிலையங்களின் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கயைம ஒலுமடு கமநலசேவை நிலையப்பிரிவில் உள்ள மணவாளன் பட்டமுறிப்பு தச்சடம்பன் ஒலுமடு ஆகிய நீர்ப்பாசனக்குளங்களின் கீழுள்ள விவசாயிகள் 25 ஏக்கரில் நெற் பயிர்செய்கை அழிவையும் 50 ஏக்கரில் பெளதீக அளவிலான நெற்பயிர்செய்கை அழிவையும் சந்தித்துள்ளனர்.

இதேவேளை உப உணவுப்பயிர்செய்கை உட்பட்ட உணவு பயிர்செய்கை அழிவாக 148 ஏக்கரில் அழிவு ஏற்பட்டுள்ளது.