Take a fresh look at your lifestyle.

கிளிநொச்சி ஊடகவியலார்கள் ஒன்றிணைப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையாற்றி வரும் ஊடகவியலார்களை ஒன்றிணைத்து, அவர்களின் தொழில் சார் நலன்களையும் அவர்களது உரிமைகளையும்  பாது காக்கும் வகையில் ஊடக அமைப்பொன்றை உருவாக்குவது தொடர்பிலான  கலந்துரையாடல் நேற்று (17-06-2016) கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது.

மாவட்டத்தின் தனித்துவத்தைப் பாதுகாக்கும் வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்தகாலங்களில் ஊடகவியலாளர்களாக செயற்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களையும் ஒன்றிணைத்து அரசியல் தலையீடுகளற்ற ஓரு சுதந்திரமான ஊடக அமைப்பொன்றை உருவாக்குவது தொடர்பிலான  கலந்துரையாடல் ஒன்று நேற்று (17-06-2016) பிற்பகல் 3:30 மணியளவில்  கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது.

கடந்த நெருக்கடியான காலங்களிலும் அதற்குப்பின்னரும் ஊடகவியலாளர்களாக பணியாற்றி வரும் ஊடகவியலாளர்களை ஒன்றிணைத்து புதிய அமைப்பொன்றை உருவாக்கி அதன் மூலம் மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் சமுக பொறுப்புணர்வு என்பவற்றை நோக்காக கொண்டும் கடந்த காலங்களில் யுத்தத்தினால் பாதிப்புள்ளாகிய  மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நலன்களை கருத்திற்கொண்டு அவர்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்களை மேற்கொள்ளுதல் ஊடகத்துறையில் புதியவர்களை இணைத்துக் கொள்ளும் வகையிலும் தற்போது கடமையாற்றுகின்ற ஊடகவியலாளர்களையும் வலப்படுத்தும் வகையிலும் ஊடக கற்கை நெறிகள் மற்றும் பயிற்சிகளை வழங்கும் வகையில் வள நிலையம் ஒன்றினை நிறுவி அதன் மூலம் சிறந்த துறை சார் வளவாளர்களை வரவழைத்து பயிற்சிகளை வழங்குதல் ஊடக சுதந்திரத்திற்காக குரல் கொடுக்கும் அமைப்புக்களில் அங்கத்துவத்தை ஏற்படுத்துதல் அத்துடன் மாவட்டத்தில் பணியாற்றி உயிரிழந்து மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவுதல் போன்ற பல்வேறு விடயங்களைக் கருத்திற்கொண்டு அரசியல் தலையீடுகள் இல்லாத அமைப்பொன்றை  உருவாக்கும் வகையில் நேற்று நடைபெற்ற இக்கலந்துரையாடலில் மாவட்டத்தில் தற்போது பணியாற்றி வரும் 13 ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டதுடன் எதிர்வரும் ஒரு மாத காலத்திற்குள் புதிய நிர்வாகம் ஒன்றை அமைத்து மேற்படி விடயங்களை நடைமுறைப்படுத்துவதாகவும் இதில் தீர்மானக்கப்பட்டுள்ளதுடன் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட அமைப்பாகவும் செயற்படவுள்ளது.

அத்துடன் பிரித்தானியாவில் இருந்து உதவிகளைப் பெற்று ஊடக அறிவுசார் திறன் விருத்திற்கு உதவி வழங்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்வரும் ஒரு மாத காலத்தில் ஊடக அமைப்பொன்றை உருவாக்கும் வகையிலும் ஊடகவியலாளர்களை ஒன்றிணைக்கும் வகையிலும் நிர்வாக செயலாளராக சு. பாஸ்கரன் அவர்களும் இணைச்செயலாளராக க. ரவீந்திரன் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.