Take a fresh look at your lifestyle.

நிபந்தனைகளை மீறி தென்னிலங்கைத் தொழிலாளர்கள் கட்டைக்காட்டில்

IMG_4979யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பரப்பில் அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறி கடலட்டை பிடித்த வெளிமாவட்ட மீனவர்களுக்கும் உள்ளுர் மீனவர்களுக்கும் இடையில் நேற்று(16-06-2016) கடலில் மோதல் ஏற்பட்டதையடுத்து பதற்றமான சூழ்நிலை காணப்பட்டதுடன்  அத்துமீறலைத் தட்டிக்கேட்ட உள்ளுர் மீனவர்கள் வெளிமாவட்ட மீனவர்களால் தாக்கப்பட்டனர்.

முல்லைத்தீவில் கடலட்டை பிடிப்பதற்கான அனுமதிப்பத்திரத்துடன் 61 படகுகளுடன் கூட்டமாக வந்த, 165 குறித்த மீனவர்கள் கட்டைக்காடு கடற்பரப்பில் நேற்று பிற்பகல் 3:30 மணியளவில் கடலட்டை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

IMG_4966அவர்களின் அத்துமீறல்களைத் தட்டிக்கேட்ட கட்டைக்காடு மீனவர்களை தென்னலங்கை மற்றும் வெளிமாவட்ட மீனவர்கள் இரும்புக்கம்பிகள் கொட்டன்களால் கடுமையாகத்தாக்கினர்.  இதனால் உள்ளுர் மீனவர் ஒருவர் காயமடைந்தார். இதனையடுத்து ஆத்தரமடைந்த கட்டைக்காடு கடற்தொழிலாளர்கள் அத்துமீறிய 165 தென்னிலங்கை மற்றும் வெளிமாவட்ட  மீனவர்களையும் மடக்கிப்பிடித்தனர். அவர்களது 61 படகுகளுடன் அனைவரையம் கரைக்குக் கொண்டு வந்தனர். இதனால் அந்தப்பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவத்தை அறிந்து சிறிது நேரத்தில் மருதங்கேணி பிரதேச செயலர் அந்த இடத்திற்கு விரைந்துசென்று உள்ளுர் கடற்தொழிலாளர்களுடன் பேசினார்.

IMG_4992மேலும் பொலிசார் மற்றும் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளும் மாகாண சபை உறுப்பினர் பி. சுகிர்தன் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

இரு தரப்பினருடனும் பேசிய அதிகாரிகள் மனிதாபிமான அடிப்படையில் தென்னிலங்கை மற்றும் வெளிமாவட்ட  மீனவர்களை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

இதனையடுத்து நேற்று வியாழக்கிழமை இரவு 7:45 மணிளவில் தென்னிலங்கை மற்றும் வெளிமாவட்ட  மீன்வர்கள் அனைவரும் அவர்களது படகுகளுடன் விடுவிக்கப்பட்டனர்.