Take a fresh look at your lifestyle.

பளைப்பகுதியில் விபத்து இருவர் காயம்

நேற்று இரவு 10:00 மணியளவில் பளைப்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கிவந்த மோட்டார் சைக்கிள், மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் காயமடைந்துள்ளனர்.  அத்தோடு மோட்டார் சைக்கிள் பலத்த சேதத்துக்குள்ளாகியது.  இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் வள்ளிபுனம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் என அறிய முடிகிறது விபத்து தொடர்பான மேலதிக விசாரைனையை பளைப் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.