Take a fresh look at your lifestyle.

பெண்கள் இருவர் உயிரிழந்தார்கள்

வவுனியா மற்றும் ஊர்காவற்துறை ஆகிய பகுதிகளில் நேற்று இடம்பெற்ற இருவேறு சம்பவங்களில் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளார்கள்.

வவுனியா, செட்டிக்குளம் வீதியில், சாம்பல்தோட்டத்துக்கு திரும்பும் சந்தியில் இடம்பெற்ற விபத்தில், நெலுங்குளம் அரசாங்க வீட்டுத்தொகுதியை வசிப்பிடமாகக் கொண்டிருந்த 34 அகவையுடைய சுதாநாதன் வனஜா காயம் அடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஊர்காவல் துறை பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவில், கலபும் காரைநகர் என்ற விலாசத்தை வசிக்கும் 29 வயதான கனேஷபுள்ளை மாலினி என்ற பெண், தன்வீட்டில் உள்ள கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்த நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.