Take a fresh look at your lifestyle.

இலங்கையில் 16 திருவள்ளுவர் சிலைகள்

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நிறுவுவதற்காக 16 திருவள்ளுவர் சிலைகளை விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் இலங்கை அரசிடம் வழங்கியுள்ளது என, இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ள.

தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம் தலைமையில் இயங்கி வரும் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் தனது தமிழ்ப் பணிகளின் ஓர் அங்கமாக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் திருவள்ளுவர் சிலைகளை நிறுவி வருகிறது.

உலகின் பல்வேறு பகுதிகளிலும் திருவள்ளுவர் சிலைகளை நிறுவி வரும் இவ்வமைப்பு இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான திருகோணமலை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, புத்தளம்,  உட்பட 16 இடங்களில் வள்ளுவர் சிலைகளை நிறுவதீர்மானித்துள்ளது.

இதற்காக சிற்பி ஜானகிராமன் என்பவரைக் கொண்டு பைபர் கிளாஸ் பொருளால் 16 வள்ளுவர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த சிலைகளை இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் அறிமுக விழா சென்னையில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றுள்ளது.

குறித்த விழாவில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்க நிறுவனர் வி.ஜி. சந்தோஷம், இலங்கை கல்வி அமைச்சகத்தின் செயலாளர் திசா ஹெவாவிதானா, சென்னையில் உள்ள இலங்கை துணை தூதர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் வள்ளுவர் சிலைகளை ஒப்படைக்கப்பட்டுள்ளது.