Take a fresh look at your lifestyle.

காணாமல் போனோர் முறைப்பாடுகள், விசாரணை முற்று

காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணைகளை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் ஜூலை 15ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் யுத்த காலப் பகுதியில் காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகள் குறித்து ஆராய, கடந்த ஆட்சிக் காலத்தில், மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டு , அந்த குழு வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள மக்களின் முறைப்பாடுகளைப் பதிவு செய்து சாட்சி விசாரணைகளை முன்னெடுத்ததோடு, குறித்த விசாரணைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனடிப்படையில் குறித்த விசாரணைகள் தொடர்பான அறிக்கை தயாரிக்கும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாககவும்,அந்த அறிக்கையை எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாணைக்குழு தெரிவித்துள்ளது.