Take a fresh look at your lifestyle.

மொஹமட் முஸம்மில் கைது

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த குற்றச் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்றை தினம் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகி இருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று கோட்டை நீதிமன்றில் முன்னிலைபடுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.