Take a fresh look at your lifestyle.

தனியார் வீட்டுள் நுழைய முயலும் சிறீலங்கா இராணுவம்

தர்மபுரம்பகுதியில் உள்ள இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள வீட்டினுள் இராணுவம், புக முற்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது, குறித்த சம்பவம் நேற்று முந்தினம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு இடம்பெற்றள்ளது.

குறித்த வீட்டில் நடமாட்டம் காணப்படுவதாக தெரிவித்து குறித்த நபரை கலைத்துச் சென்றபோது, குறித்த நபர் அருகிலுள்ள இராணுவ முகாமிற்குள் புகுந்ததாக தெரிவிக்கப்படுகின்றது, குறித்த நபரின் செயற்பாடு தொடர்பில் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது,

குறித்த சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற இலத்திரனியல், மற்றும் அச்சு ஊடக செய்தியாளர்களை மிரட்டும் செயற்பாட்டில் இரணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். குறித்த ஊடகவியலளர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளின் இலக்கத்தினை பதிவு செய்தமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் இராணுவத்தினரிடம் வினவியபோது, இப்பகுதிக்கு வரும் அனைவரது வாகன இலக்கங்களும் பதிவு செய்யப்பட்டு உயரதிகாரிக்கு அனுப்புவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.