Take a fresh look at your lifestyle.

பயிரைத் தின்ற வேலியின் கதை தொடருமா?

காணாமல் போனோர் தொடர்பில் ஆராயும் ஆணைக்குழுவின் ஆயுட்காலத்தை இன்னும் ஒரு வருடத்துக்கு நீடிக்க முடியுமானால் காணமல் போனவர்கள் குறித்து நிச்சயமாக அறிந்துகொள்ள முடியும் என ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வேல் பரணகம தெரிவித்துள்ளார்.

காணமல் போனவர்கள் தொடர்பில் ஆராயும் ஆணைக்குழுவின் கால எல்லை எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.

இதுவரை காலமும் காணமல் போனவர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள் மற்றும் சாட்சிகள் தொடர்பாகவே விசாரணைகள் இடம்பெற்றதாகவும், இவற்றில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டவர்களுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ள முடியாமல் போனதாகவும் அதற்கு இன்னும் காலம் தேவைப்படுவதாகவும் மக்ஸ்வேல் பரணகம தெரிவித்துள்ளார்.

தமது ஆணைக்குழுவின் காலம் இன்னும் நீடிக்கப்ப்படுமானால் காணமல் போனர்வகளுக்கு என்ன நடந்தது, எத்தனை நபர்கள் காணமல் போயுள்ளனர் என்பது தொடர்பாக கண்டறிய முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.