Take a fresh look at your lifestyle.

பயிரை மேய்ந்த வேலிக்கு பின்வேலி விசாரணை: இலங்கை இராணுவம் உருவாக்கும் இரண்டு விசாரணை நீதிமன்றங்கள்

இலங்கை இராணுவம் இரண்டு விசாரணை நீதிமன்றங்களை உருவாக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் மற்றும் சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை ஆகிய சம்பவங்கள் தொடர்பில் இராணுவ நீதிமன்ற விசாரணைகள் நடத்தப்பட உள்ளது.

இந்த விசாரணைகளுக்காக இராணுவம் இரண்டு நீதிமன்றங்களை நிறுவியுள்ளது.

லசந்த கொலை மற்றும் எக்நெலிகொட காணாமல் போன சம்பவங்கள் குறித்த ஆவணங்கள் மாயமானவை குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.

லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பிலான விசாரணைகளுக்கு இராணுவம் போதியளவு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது.

சட்டம் ஒழுங்கினை நிலைநாட்ட இராணுவம் அர்ப்பணிப்புடன் செயற்படும் எனவும், இராணுவத்தினர் எவரேனும் சட்ட மீறல்களில் ஈடுபட்டால் அவ்வாறானவர்களை பாதுகாக்கப் போவதில்லை என இராணுவம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.