Take a fresh look at your lifestyle.

“போர்குற்றவாளிகளை இலங்கை அரசாங்கம் பாதுகாக்கிறது” – வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்

போர்குற்றவாளிகளை பாதுகாக்கவே வெளிநாட்டு நீதிபதிகளை ஏற்க அரசு மறுத்து வருவதாக வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிநிதியுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் குற்றம் செய்தவர்களை பாதுகாக்கும் எண்ணத்துடன் இவ்வாறான கூற்றுக்களை தெரிவித்து வருகின்றது.

அதாவது வெளிநாட்டு நீதிபதிகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று சொல்வதன் அர்த்தம் குற்றவாளிகளை இந்த விசாரணைமூலம் அடையாளம் காணப்படாது என்ற காரணத்திற்காகத்தான் என்பது என்னுடைய கருத்து என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணம் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து நாங்கள் நல்லெண்ணத்திற்கான நடவடிக்கை எடுப்பதற்கு ஆர்வமாக இருக்கின்றோம் என்பதையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அதிகாரியிடம் எடுத்துரைத்துள்ளதாகவும், சமஷ்டி என்பது பிரிவினை என்ற கருத்தை இதுவரையும் சிங்கள மக்களிடம் தெற்கு அரசியல் வாதிகள் தெரிவித்து வந்துள்ளார்கள்.

அது பிளையானதொன்று சமஷ்டி என்பது பிரிவினையல்ல அது மக்களை சேர்த்துவைத்தல் ஆகவே தெற்கில் உள்ள மக்களுக்கு இது சம்மந்தமாக எடுத்துரைக்க வேண்டிய தேவை தெற்கு அரசியல் வாதிகளிடம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.